டிரம்பை மதிக்காத ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியில் 2 கப்பல்கள் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்! | Iran missile hit 2 commercial ships ransiting the strait o Hormuz amid of Trump threat

Spread the love

International

oi-Nantha Kumar R

டெஹ்ரான்: அமெரிக்கா உடனான போர் நிறுத்த ஒப்பந்தம், அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டலுக்கு நடுவே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்ற 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் சரக்கு கப்பல்கள் சேதமடைந்துள்ளது. இதனால் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் தற்காலிக ஒப்பந்தம் அடிப்படையில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தது. இருப்பினும் கூட அமெரிக்கா – ஈரான் இடையே கருத்து மோதல்கள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

iran strait of hormuz

இதனால் கோபமான அமெரிக்கா, ஈரான் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. பதிலுக்கு ஈரானும், கத்தார் உள்பட பிற நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவபடை தளங்களை குறிவைத்து அடித்தது. தற்போது அந்த மோதலும் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஹார்முஸ் ஜலசந்தியை 2 சரக்கு கப்பல்கள் கடந்தன. அப்போது அந்த 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை ஈரான் தான் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஈரானில் உள்ள புரட்சிகர காவல் படை சார்பில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 2 ஏவுகணைகள் தனித்தனியாக அந்த கப்பல்களை தாக்கி உள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் கப்பல்கள் சேதமடைந்துள்ளன.

இது தற்போது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் நடத்தப்படும் தாக்குதல்கள் என்பது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்து இருந்த நிலையில் தற்போது ‘அட்டாக்’ நடந்துள்ளது. இதனால் மீண்டும் பிரச்சனை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது ஈரானின் முன்னாள் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கு நடந்து வருகிறது. ஜுலை 9 ம் தேதி வரை இது நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இது ஓரளவு நிம்மதியை தந்துள்ளது. இருந்தாலும் அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தனது நிலைப்பாட்டை மாற்றலாம் என்பதால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *