ஆந்த்ரோபிக் IPO: ஒரு பங்கு 83 டாலர்; நாஸ்டாக்கில் இன்று பட்டியலாகிறது!|Claude Maker Anthropic Goes Public: What Investors Should Know

Spread the love

பிசினஸ்கள் தொடங்கி மொபைல் போன்கள் வரை அனைத்திலும் ஏ.ஐ சிறப்பு இடம் பிடித்துவிட்டன. நிகழ்காலத்திலேயே நிரம்பியிருக்கும் ஏ.ஐ, எதிர்காலத்தில் எல்லாமுமாக மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் கூட உண்டு.

அதனால், ஏ.ஐ துறையில் வேலைவாய்ப்பு முதல் சந்தை வரை அனைத்திலும் சிறப்பான வாய்ப்புகள் உண்டு. இதனால், இந்தத் துறையை மிஸ் செய்ய யாரும் விரும்பமாட்டார்கள்.

அமெரிக்க ஏ.ஐ நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக் (Anthropic, PBC) இன்று (நவம்பர் 19 – அமெரிக்க நேரப்படி) தங்களுடைய ஐ.பி.ஓக்களை நாஸ்டாக் குளோபல் செலக்ட் மார்க்கெட்டில் பட்டியலிட இருக்கிறார்கள்.

ஆந்த்ரோபிக் அறிக்கை

ஆந்த்ரோபிக் அறிக்கை

இது குறித்து ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியப் புள்ளிகள்…

சாதாரணப் பங்குகளான ‘கிளாஸ் ஏ’ பங்குகளின் ஐ.பி.ஓ விலை: 83 டாலர்.

எத்தனை கிளாஸ் ஏ பங்குகள் விற்பனைக்கு வருகின்றன?

98 கோடி. இதில் 95,63,51,354 பங்குகளை ஆந்த்ரோபிக் நிறுவனமும், மீதமுள்ள 2,36,48,646 பங்குகளை நிறுவனத்தின் குறிப்பிட்ட சில பங்குதாரர்களும் விற்பனை செய்கின்றனர்.

பங்குதாரர்கள் விற்கும் பங்குகள் மூலம் கிடைக்கும் தொகை ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்குச் சேராது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *