“த.வெ.க ஆட்சி கவிழும்’ என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ச்சியாக பேசிவரும் நிலையில் ‘தி.மு.க-விலிருந்து ஆள் தூக்குங்க’ என உத்தரவிட்டிருக்கிறதாம் தமிழ்நாடு முதல்வர் விஜய் தரப்பு.
தலைமையிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததும் ‘நம்ம கட்சிக்கு வந்துவிடுங்கள்’ என பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார்களாம் மாண்புமிகுக்கள்!
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் “த.வெ.க ஆட்சி அமைந்து 6 மாதங்கள் ஆகிவிட்டதால் சட்டமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் சூழல் தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.என் நேரு இல்லத் திருமண விழாவில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், த.வெ.க ஆட்சி கவிழ்ந்து தி.மு.க ஆட்சி விரைவில் அமையும் எனப் பொருள்பட பேசியிருக்கிறார். த.வெ.க ஆட்சி கவிழ்ந்துவிடும் என தி.மு.க-வினர் பேசியது முதல்வர் தரப்புக்கு கடும் டென்ஷனை கொடுத்திருக்கிறதாம்” என்றனர்