ஆனந்த விகடன் இதழில் தொடங்குகிறது, நரன் எழுதும் ‘ஆயிரம் சூரியன்கள்’ வரலாற்றுப் புனைவுத் தொடர்! The historical fiction series ‘Aayiram Sooriyangal’ (A Thousand Suns), written by Naran, begins

Spread the love

இந்தப் புனைவை மிகப்பெரும் காட்சிச் சித்திரிப்புகளுடன் உயிரோட்டமாகப் படைத்தளிக்கும் நரன், விருதுநகரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2016 – ம் ஆண்டு விகடனின் இலக்கிய அடையாளமான ‘விகடன் தடம்’ இதழில் அவரின் முதல் சிறுகதையான ‘பெண்காது’ பிரசுரமானது. இதுவரை நான்கு நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், நான்கு கவிதை தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினான்கு இலக்கிய விருதுகளை வென்றிருக்கிறார்.

விகடனில் இதுவரை ‘ஏழுகடல் ஏழுமலை, ‘வேட்டை நாய்கள்’ ஆகிய இரண்டு சிறந்த தொடர் கதைகளை எழுதியுள்ளார். காட்சி ஊடகங்களில் பரணியாற்றியுள்ள நரன், தற்போது ‘Type Writer’ என்ற Script நிறுவனத்தை நடத்தி வருகிறார். .

தமிழ் வரலாற்றில் இழையெடுத்து உணர்வும் உயிர்ப்புமாக உருவாகியிருக்கும் ‘ஆயிரம் சூரியன்கள்’ வரலாற்றுத் தொடரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆனந்த விகடனில் வாசிக்கத் தவறாதீர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *