தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் தொடர்கதையாக இருக்கிறது. கன்னியாகுமரியில் தவெக நிர்வாகி கிறிஸ்டோஃபர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்பு, நெல்லை, வேளாங்கன்னி போன்ற இடங்களில் எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, முதல்வர் விஜய் உறக்க நிலையில் உள்ளாரா? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (அக். 23) கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்மோகனிடம் கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “எந்தப் பாலியல் குற்றங்களையுமே நாங்கள் குறைத்து மதிப்பிடமாட்டோம். தவெக நிர்வாகி, தவெக நிர்வாகி என்று சொல்கிறார்கள். ஆன்லைனில் தங்களைத் தாங்களே இணைத்துக் கொண்டவர்கள் எல்லாம் நிர்வாகிகள் இல்லை.