நடுவானில் பயங்கரமாக மோதிய 2 விமானங்கள்.. விமானத்தில் பயணித்த 4 பைலட்டுகளும் பலி | 4 pilots killed in mid air collision of Philippines military planes

Spread the love

International

oi-Nantha Kumar R

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் நடுவானில் பறந்து கொண்டிருந்த 2 விமானங்கள் திடீரென்று மோதிக்கொண்டதில் அந்த விமானங்களில் பயணித்த 4 பைலட்டுகளும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து எப்படி நேர்ந்தது? என்பது தொடர்பான திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டின் படாங்கஸ் மாகாணத்தில் பெர்ணாண்டோ என்ற விமான தளம் உள்ளது. இந்த விமான தளத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படை பைலட்டுகள் பயிற்சி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

philippines pilots

இந்நிலையில் நேற்றைய தினம் எஸ்எஃப் 260 ரக விமானங்களில் பைலட்டுகள் பயிற்சி மேற்காண்டனர். அப்போது எதி்ரபாராதவிதமாக வானில் இரண்டு விமானங்கள் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதில் விமானத்தில் பயணித்த 4 பைலட்டுகளும் பரிதாபமாக இறந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *