“‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ -க்கு இந்திய ராணுவமும் தயாராகி வருகின்றன!” – ராணுவத் தளபதி ஜெனரல் திவேதி |”The Indian Army is also gearing up for ‘Operation Sindoor 2.0’!” — Army Chief General Dwivedi

Spread the love

புனேயில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமியின் (NDA) 150-வது பயிற்சிப் படிப்பின் நிறைவு நாள் அணிவகுப்பு விழாவில்செய்தியாளர்களைச் சந்தித்த ஜெனரல் உபேந்திர திவேதி, “ஆபரேஷன் சிந்தூர் பொறுத்தவரை, அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தற்போது தற்காலிகப் போர் நிறுத்தம் மட்டுமே நிலவுகிறது. எனவே, ஒருவேளை அடுத்த கட்டப் போர் மூண்டால், ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கையை எதிர்கொள்ள இந்திய ராணுவமும், மற்ற இரு படைகளும் மிகச் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றன.

தற்போது போர்க்களங்கள் வெளிப்படையாக மாறிவிட்டன. நமது ஒவ்வொரு அசைவும் அடுத்த தரப்பிற்கு எளிதில் தெரிந்துவிடுகிறது.

எனவே, எல்லையோரப் பகுதிகளில் நமது படைகளை நிலைநிறுத்துவது, கையாள்வது மற்றும் நமது வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *