ஆபாச மெசேஜ்: “ஆட்சியருக்கு நீதி: அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மாணிக்கம் தாகூர் | Manickam Tagore has urged that appropriate action be taken against Arul Vignesh.

Spread the love

சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், “ கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக – எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள், செய்தித் தொலைக்காட்சிமற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல் பொது வெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கும் உத்தரவிட வேண்டும், டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்து பத்திரப்படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செய்திதாள்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எப்படி உத்தரவிட முடியும்? மாவட்ட கலெக்டர் எதுவும் புகார் அளித்துள்ளாரா? ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *