“மேற்கு வங்காளம்” பெயர் மாற்றம்.. இனி ‘பஸ்சிம் பங்கா’ என்று தான் அழைக்கணும்.. பாஜக அரசு முடிவு | West Bengal to be renamed Pashim banga proposal to be tabled in Assembly on December 9, says CM

Spread the love

India

oi-Nantha Kumar R

கொல்கத்தா: மேற்கு வங்காளம் மாநிலத்தின் பெயரை ‘பஸ்சிம் பங்கா’ என மாற்றம் செய்வதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த புதிய பெயர் ஏன்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு முழுமையாக பார்க்கலாம்.

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

west bengal name pasim banga

தற்போது மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளது. மேற்கு வங்காளத்தின் பெயரை ‘பஸ்சிம் பங்கா’ என்று மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பேச்சுக்கள் சமீபத்தில் தீவிரமான நிலையில் தற்போது அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து மேற்கு வங்காளம் பெயரை ‘பஸ்சிம் பங்கா’ என பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் டிசம்பர் 9 ம் தேதி அம்மாநில சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் குளிர்கால கூட்டத்தொடர்ப டிசம்பர் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் சுவேந்து அதிகாரி கூறுகையில், ”மாநிலத்தின் பெயரை மேற்கு வங்காளம் என்பதற்கு பதில் ‘பஸ்சிம் பங்கா’ என மாற்றுவதற்கான தீர்மானம் முதலில் சட்டசபையில் நிறைவேற்றப்படும். பிறகு இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு அனுமதி கொடுத்த உடன் மாநிலத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது” என்றார்.

இதில் ‘பச்சிம்’ என்றால் வங்க மொழியில் மேற்கு என்று பொருள்படும். ‘பங்கா’ என்றால் வங்காளம் என்று பொருள்படும். தங்களது மாநிலத்தின் பெயரை வங்க மொழியிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஆளும் பாஜக அரசு இந்த பெயர் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. மேற்கு வங்காளத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என்று மாற்றம் செய்ய வேண்டும் என்பது அங்குள்ள ஒரு தரப்பு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்றம் செய்யும் முயற்சி கடந்த 1999ல் தொடங்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜோதி பாசு அரசு இதனை முன்னெடுத்தார். ஆனால் நடக்கவில்லை. பிறகு 2011-ல் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வராக இருந்த மம்தா பானர்ஜி அரசு மேற்கு வங்காளத்தின் பெயரை ‘பஸ்சிம் பங்கா’ என்று மாற்ற முடிவெடுத்தது. அனைத்து கட்சி கூட்டத்திலும் ஆதரவு கிடைத்தது. ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

2016ல் மீண்டும் மம்தா பானர்ஜி இந்த விவகாரத்தை கையில் எடுத்த நிலையில் அதுவும் நடக்கவில்லை. தற்போது மத்தியிலும் பாஜக, மாநிலத்திலும் பாஜக என்பதால் எளிதாக பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தற்போது மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில் பெயர் மாற்றத்துக்கான முன்னெடுப்புகள் தீவிரமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *