ஆபாச மெசேஜ்: “தவெக; பொய் சொல்வதை எவ்வளவு துணிச்சலாக சொல்கிறார்கள்?” – பாஜக தமிழிசை சௌந்தரராஜன் | Tamilisai Soundararajan has strongly criticized the issue regarding obscene messages.

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பானது. இந்த விவகாரம் குறித்து பேசிய அருள் விக்னேஷ், “இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. என்னை முடக்குவதற்கு போடப்பட்ட சதித்திட்டம்.” என உறுதியாக மறுத்தார்.

அதைத் தொடராக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “அருள் விக்னேஷ் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். முதல் பட்டதாரி, அவரே பாவம்… அவர்மீது சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை வைத்து குற்றம்சாட்டமுடியாது. அவரே இல்லை என விளக்கமளித்திருக்கிறார்.” எனப் பேசியிருந்தார்.

எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் - மாணிக்கம் தாகூர்

எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் – மாணிக்கம் தாகூர்

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “சமூக ஊடகத்தில் யாரோ பரப்பியதை வைத்து எல்லோரும் அவர் மீது குற்றம்சுமத்துகிறார்கள். கனிமொழி இதை அரசியலாக்க வேண்டும் என்பதற்காக இதைத் தொடங்கியிருக்கிறார். வதந்திகளுக்கெல்லாம் பதில சொல்லிக்கொண்டிருக்க முடியாது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அதிமுக வழக்கறிஞர் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை தேவை என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது தமிழ்நாடு அரசு, “மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *