ஆபாச மெசேஜ் விவகாரம்: “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்” – எம்.பி கனிமொழி| Obscene message issue: “I wholeheartedly commend the Kallakurichi District Collector” – MP Kanimozhi

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பானது. இந்த விவகாரம் குறித்து பேசிய அருள் விக்னேஷ், “இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. என்னை முடக்குவதற்கு போடப்பட்ட சதித்திட்டம்.” என உறுதியாக மறுத்தார்.

அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “அருள் விக்னேஷ் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். முதல் பட்டதாரி, அவரே பாவம்… அவர்மீது சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை வைத்து குற்றம்சாட்டமுடியாது. அவரே இல்லை என விளக்கமளித்திருக்கிறார்.” எனப் பேசியிருந்தார்.

அமைச்சர் நிர்மல் குமார்

அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “சமூக ஊடகத்தில் யாரோ பரப்பியதை வைத்து எல்லோரும் அவர் மீது குற்றம்சுமத்துகிறார்கள். கனிமொழி இதை அரசியலாக்க வேண்டும் என்பதற்காக இதைத் தொடங்கியிருக்கிறார். வதந்திகளுக்கெல்லாம் பதில சொல்லிக்கொண்டிருக்க முடியாது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி தன் எக்ஸ் பக்கத்தில், “தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *