பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க, சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கக்கூடிய வகையில் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவது தடை செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டிகள், திருமணம், இறுதிச் சடங்கு அல்லது அதுபோன்ற குடும்ப நிகழ்வுகளின் போது கூடும் கூட்டம் அல்லது ஊர்வலம், மத வழிபாட்டுச் சடங்குகளின் போது கூடும் கூட்டம் அல்லது ஊர்வலம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தால், அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் நடத்தப்படும் பூஜைகள் மற்றும் திருவிழா சடங்குகள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் தொடர்புடைய வழக்குகள் ஆகியவற்றைச் செயல்படுத்தும் விதமாக வழக்கமான இடங்களில் நடைபெறும் தற்போதைய மத வழிபாடுகள் மற்றும் மலை மீதுள்ள தர்கா மற்றும் பிற நிறுவனங்களின் சட்டப்பூர்வமான மத நடவடிக்கைகள், அணுகல் மற்றும் பயன்பாடுகள் காவல்துறையின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும் எனவும் இந்த உத்தரவு 23.11.2026 இரவு 21:00 மணி முதல் 25.11.2026 காலை 10:00 மணி வரை (அதற்கு முன்னதாகத் திரும்பப் பெறப்படாவிட்டால்) நடைமுறையில் இருக்கும்” என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையொட்டி இன்று காலை முதல் மதுரையில் உள்ள இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 12 காவல் கண்காணிப்பாளர்கள் (SP) மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் 5000 போலீசார் திருப்பரங்குன்றத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் மதுரையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.