ஆப்பிள் லாஞ்சுக்கு ஒரு நாளைக்கு முன்னாடி.. சம்பவம் செய்த Huawei! மொத்த மொபைல் உலகமும் ஷாக்! | Huawei, Xiaomi launch new foldable phones days before Apple’s first foldable iPhone debut

Spread the love

International

oi-Halley Karthik

பெய்ஜிங்: நாளை மறுநாள் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களை லாஞ்ச் செய்ய இருக்கிறது. நிச்சயமாக மடிக்கக்கூடிய வகையிலான போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில், சீனாவின் Huawei நிறுவனம் தனது மடிக்கக்கூடிய போனை அறிமுகப்படுத்தி மொத்த மொபைல் சந்தையையும் அலற விட்டிருக்கிறது.

கையில் ஐபோன் வைத்திருந்தால்தான் கெத்து என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில்.. Huawei போன்தான் கெத்து. சீனாவை பற்றி நமக்கு தெரியும். ஏராளமான டெக்னாலஜியை கொண்டிருக்கும் நாடு. இப்பேற்பட்ட நாட்டு மக்கள் ஐபோனை பெரிய அளவுக்கு சீண்ட கூட மாட்டார்கள். காரணம், ஐபோனை விட டெக்னாலஜியில் Huawei தான் சிறந்தது என்பது அவர்களுக்கு தெரியும். இப்படி இருக்கையில்தான் தற்போது Huawei புதிய மொபைலை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Huawei

Mate XT2 என்கிற பெயரில் இந்த மொபைல் வெளியாகியுள்ளது. இதனை இரண்டு முறை மடிக்கலாம். அதாவது சாதாரணமாக பார்த்தால் மொபைல் மாதிரி இருக்கும். ஆனால், அதை விரித்தால் டேப் மாதிரி இருக்கும். இதற்கு Redesigned folding mechanism என்று பெயர். இந்த மொபைலில் Huawei நிறுவனத்தின் புதிய Kirin 9050 pro சிப் பொறுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வர்த்தக தடைகளையும் தாண்டி, குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி சிறப்பான செயல்திறனை வழங்கும் வகையில் இந்த சிப் உருவாக்கப்பட்டிருக்கிறது. முந்தைய மாடலை விட இந்த சிப் 42% சிறப்பான செயல்திறனை தரும் என்று சொல்லப்படுகிறது.

அடுத்து கேமராவின் தரம். கேமரா என்றாலே அது Huawei தான். ஆப்பிள் எல்லாம் 5வது இடத்தில்தான் இருக்கிறது. அந்த வகையில் Mate XT2 போனில் மேம்படுத்தப்பட்ட 50MP கேமராவை கொடுத்திருக்கிறது Huawei. சாதாரண பட்ஜெட் போனில் கூட இப்போதெல்லாம் 108MP கேமரா கொடுக்கிறார்கள். அப்படியெனில் Huawei போனில் கொடுக்கப்பட்டிருக்கும் 50MP என்பது தரம் குறைந்ததா? என்று கேள்வி எழலாம்.

மொபைல் கேமரா உலகை பொறுத்தவரை.. எத்தனை MP என்பது கேமராவின் தரத்தை நிர்ணயிக்காது. மெகாபிக்சலை விட சென்சார் எவ்வளவு பெரியது என்பதில்தான் விஷயமே இருக்கிறது. அப்படி பார்த்தால், பெரிய சென்சாருடன் 50 மெகாபிக்சல் கேமராக்கள்தான் கெத்து. எனவே Mate XT2 போனில் கொடுக்கப்பட்டிருக்கும் கேமரா நிச்சயம் உலகத்தரம் வாய்ந்ததாகதான் இருக்கும்.

சிறந்த கேமரா, நீர் புகாத வசதி ஆகியவற்றுடன்.. பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் மொபைலை பார்க்காதவாறு ஆப்ஷனல் பிரைவசி ஸ்கிரீன் அம்சமும் Mate XT2 போனில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

நாளை மறுநாள் ஐபோன் புதிய போன்களை லாஞ்ச் செய்ய இருக்கும் நிலையில், தற்போது Huawei தனது புதிய மாடலை இறக்கியிருப்பது, ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆனால், Huawei போன்கள் இந்தியாவில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *