ஒரு படைப்பை வெளியிடுறோம்னா அதனுடைய ரீச் தான் முக்கிய நோக்கமா இருக்கும். அதேபோலத்தான் இதனுடைய ரீச்சையும் கவனத்தில் வச்சே ‘கிறுக்குச் சிறுக்கி’ன்னு டைட்டில்.
‘காவாலா’ பாட்டு பாத்திருப்பீங்கல்ல, அந்த ஸ்டைல்ல இருக்கும். பார்க்கிறவங்க ‘அயிட்டம் சாங்’னு சொல்வாங்க. நாம் அப்படிச் சொல்ல மாட்டேன். வணிக நோக்கத்துக்காக கொஞ்சம் மசாலா தூவுறது சினிமாவுல மட்டும்தான் இருக்குமா, சிங்கிள் ஆல்பத்துலயும் இருக்கலாம்தானே’ எனச் சிரித்தவரிடம்,
‘சரி, நீங்க தமிழ்நாட்டைக் காலி செய்து விட்டு கர்நாடகாவில் போய் செட்டிலாகி விட்டதாக ஒரு தகவல் உலா வருதே, நிஜமா’ என்ற கேள்வியையும் வைத்தோம்.
‘ஆமாங்க. ஆனா அது பர்மனன்ட்னு இப்ப சொல்ல முடியாது. தற்காலிகமா லைஃப் ஸ்டைல்ல ஒரு மாறுதல் தேவைப்பட்டுச்சு. இங்கயும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிச்சு வந்த பிறகு சினிமா, டிவியில் பெரிசா எந்த வாய்ப்பும் அமையலையா, அதான் மைசூருக்குப் போயிட்டேன்.
சமீப சில ஆண்டுகளாகவே என் மனம் அமைதி, ஆன்மிகத்தைத் தேடுனதை உணர்ந்தேன். அதுக்கு யோகாதான் தீர்வுனு தோணுச்சு. சென்னையிலயும் யோகா இருக்குதான். ஆனா மைசூர்ங்கிறது யோகாவின் பிறப்பிடம்னு சொல்றாங்க. அங்க போனா முறையான குருமார்கள்க்கிட்ட அதைக் கத்துகிட முடியும்னு சொன்னாங்க.
அந்த ஒரே காரணத்துக்காகவே கிளம்பிட்டேன்.
தற்சமயம் பையனுக்கு சம்மர் லீவுங்கிறதால சென்னை வந்தேன். அடுத்த சில தினங்கள்ல மைசூர் திரும்பிடுவேன். அங்க வாழ்க்கை அமைதியாப் போயிட்டிருக்கு” என்கிறார்.
‘நீங்க இங்க இல்லாத இந்த நாட்களில் இங்க என்னென்னவோ நடந்திடுச்சே, ஓட்டு போடவாவது சென்னை வந்தீங்களா’ என்றால்,
‘எஸ்.ஐ.ஆர்’னு சொல்றாங்களே, அது நடந்ததுல என் பெயர் விடுபட்டுடுச்சு.. அதனால ஒட்டு போட முடியலை. அதேநேரம் விஜய் சாரை சினிமா ஆடியோ லாஞ்ச்கள்ல பார்த்துப் பேசியிருக்கேன். அவர் இப்ப சி.எம். ஆகியிருக்கார். ஒரு ஆக்டரா அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அட்மினிஸ்ட்ரேடரா எப்படி செயல்படப் போறார்ங்கிறதை இனிமேதானே பார்க்கணும்’ என்கிறார்.