“ஆரம்ப காலகட்டத்தில் அதுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன்!” – செஃப் தாமு பகிர்வு |chef damu vikatan interview about his career initial stages

Spread the love

அந்தப் பேட்டியில் அவர், “ஆரம்பத்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கப் போறேன்னு சொன்னப்ப அம்மா விடல. எவ்ளோ சொல்லியும் கேட்காம பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரியில் சேர்த்தாங்க.

அது எனக்குப் பிடிக்கலைங்கிறதனால ஒழுங்கா காலேஜுக்குப் போகாம, படிக்காம இருந்தேன். பிறகு என் விருப்பப்படி ஹேட்டல் மேனேஜ்மென்ட்ல சேர்த்தாங்க.

மூன்று வருஷமும் கிச்சனில் கவனம் செலுத்தி கோல்டு மெடல் வாங்கினேன். படிக்கும்போதே சுதர்ஷன் இன்டர்நேஷனலில் டிரெயினிங்கிற்கும் போயிட்டு இருந்தேன்.

படிப்பு முடியும்போது கேம்பஸ் இன்டர்வியூ மூலமா பாம்பே தாஜ் ஹோட்டலில் வேலை கிடைச்சது. அங்க போகும்போது எனக்கு இந்தி தெரியாது. தங்குறதுக்கு இடமில்லாம ஹோட்டலில் ஒர்க் முடிச்சிட்டு வந்து ரயில்வே ஸ்டேஷனில் தூங்கிட்டு அங்கேயே குளிச்சி கிளம்பி மறுநாள் தாஜுக்கு வேலைக்குப் போவேன்.

இப்படியேதான் கொஞ்ச நாட்கள் இருந்துச்சு. மொழி தெரியாததனால அதுவும் சிரமமாக இருந்துச்சு. எல்லாவற்றுக்கும் பழகினேன்.

கொஞ்ச வருஷம் கழிச்சு சென்னைக்கு வேலைக்காக வரும்போது ஏற்கெனவே நிறைய அடி வாங்கிப் பழகிட்டதால இங்க எல்லாமே சுலபமாகிடுச்சு. அந்த இன்டஸ்ட்ரியில் கிட்டத்தட்ட 14 வருஷம் இருந்தேன். இன்னைக்குக் கவனிக்கப்படுற இடத்துல இருக்கேன்னா ஆரம்ப காலகட்டத்தில் அதுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன்”‘ என்று பேசியிருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *