“ஆர்.எஸ்.பாரதிக்கு இது அழகல்ல…” – கடிந்துகொண்ட அமைச்சர் விஸ்வநாதன்

Spread the love

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவின்பேரில், தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் மாநிலத்தின் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள குருங்காலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.

ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் ஊடகவியலாளர்கள், `காங்கிரஸ் கட்சிக்கான ஒரிஜினல் ஓனர் நாங்கதான் என்றும், காங்கிரஸ் தற்போது தவெக-விடம் லீஸுக்கு சென்றிருக்கிறது. எத்தனை மாதம் லீஸ் என்பதுமட்டும்தான் தெரியவில்லை” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி விமர்சித்திருந்ததைக் குறிப்பிட்டு கேட்டனர். இது குறித்து பதிலளித்த அமைச்சர், “தி.மு.க கடந்த காலங்களில் பல தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையே முக்கியக் காரணம். ஆறு அமைச்சர்கள், எட்டு அமைச்சர்கள், 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஆகாயத்திலிருந்து தி.மு.க நேரடியாக வந்து வெற்றி பெறவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *