“மோடியின் பேச்சுக்கும், கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி” – எம்.பி-மாணிக்கம் தாகூர்| “What a vast gap between Modi’s words and the ground reality” – MP Manickam Tagore

Spread the love

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய நாட்டின் பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் இந்தியாவின் வளர்ச்சி குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றினார். இந்த நிலையில், தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சித் தலைவரும், எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், “நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி! மோடி அரசின் பிரம்மாண்ட விளம்பரங்களுக்குப் பின்னால் இருக்கும் அவலங்களை, நாடாளுமன்ற நிதிக் குழுவின் 40-வது அறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது.

எம்.பி-மாணிக்கம் தாகூர்

எம்.பி-மாணிக்கம் தாகூர்

5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக ₹63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. 2024-25 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ₹2,000 கோடியில் வெறும் ₹29.29 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, 98.5% நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பியனுப்பப்பட்டுள்ளது. தொழிற்துறையினர் மூலம் 2.45 லட்சம் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகக் கூறிய நிலையில், சேர்ந்தது வெறும் 16,060 பேர் மட்டுமே. அதிலும் 53.6% பேர் பாதியிலேயே வெளியேறியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *