ஆர்.பி. செளத்ரி: ஏற்றுமதி பிசினஸ் டு சினிமா; ; 35 இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை – தெரியாத கதைகள்! |R.B. Choudary: From the Export Business to Cinema—The Distinction of Introducing 35 Directors:

Spread the love

5. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 50வது படமான ‘ஆசை ஆசையாய்’ தான் ஆர்.பி.சௌத்ரியின் இளைய மகன் ஜீவா அறிமுகமான முதல் படம். இன்று பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துவரும் ரவி மரியா தான் அந்தத் திரைப்படத்தின் இயக்குநர்.

6. ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஷாஜகான்’, ‘திருப்பாச்சி’, ‘ஜில்லா’ என விஜய்யை வைத்து ஆறு திரைப்படங்களை தயாரித்துள்ளார் ஆர்.பி.செளத்ரி. திருப்பாச்சி திரைப்படத்தில் தான் இயக்குநராக பேரரசு அறிமுகமானார்.

7. சூப்பர் குட் ஃபிலிம்ஸ், மெகா சூப்பர் குட் ஃபிலிம்ஸ், சூப்பர் குட் கம்பைன்ஸ் என வெவ்வேறு பெயர்களில் பல்வேறு மொழிகளில் படங்கள் தயாரித்துள்ளார்.

8. நடிகர் சரத்குமாருடன் புரியாத புதிர் தொடங்கி, சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, கேப்டன், நாட்டாமை, சூர்யவம்சம், சிம்மராசி, மாயி, விண்ணுக்கும் மண்ணுக்கும், சமுத்திரம் ஆகிய 10 படங்களைத் தயாரித்திருக்கிறார்.

9. தமிழில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தை யோகேஷ், மேக்னா ராஜ் நடிப்பில் கன்னடத்தில் தயாரித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *