ஆறுதல் வெற்றியுடன் ஐபிஎல் தொடரை முடித்த டெல்லி அணி! – கொல்கத்தாவை வீழ்த்தியது எப்படி?

Spread the love

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியான கொல்கத்தா vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இரண்டு அணியினருக்கும் பிளே-ஆஃப் வாய்ப்பு இல்லாமல் போனாலும், தனது கெத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஆடிய போட்டிதான் இது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

dc vs kkr
dc vs kkr

இந்தச் சீசனில் டெல்லி தனது ஓப்பனர்களை மட்டுமல்ல, அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களையும் மாற்றி மாற்றி இறக்கிப் பரிசோதிப்பதை நிறுத்தவே இல்லை.

தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய கே. எல். ராகுல், “எனக்கும் டி20 கிரிக்கெட் ஆடத் தெரியும்” என 30 பந்துகளில் 60 ரன்கள் அடித்து அருமையாக ஆடினார்.

அடுத்து வந்த அக்சர் படேல் மற்றும் மில்லர் கூட்டணி அணியின் ஸ்கோரை உயர்த்த ஒரு முக்கியத் திருப்பமாக அமைந்தது. இவர்களின் இந்த ஆட்டத்தின் மூலம் இருபது ஓவர் முடிவில் அணியின் எண்ணிக்கை 203 என்ற நிலையை எட்டியது.

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்பில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்களுக்கு ஆரம்பம் என்னவோ சரியாக இருந்தாலும், பினிஷிங் சரியாக இல்லாமல் போனது.

கேப்டன் ரஹானே இந்தப் போட்டியில் ரன்களைக் குவிக்க, இலக்கு எட்டும் தூரத்தில்தான் இருந்தது.

dc vs kkr
dc vs kkr

இப்படியே ஆடினால் வெற்றி நிச்சயம் கொல்கத்தாவின் பக்கம்தான் என இருக்க, அப்போதுதான் வீசியது குல்தீப் யாதவின் சுழல் சிறந்த ஆட்டத்தை ஆடிவந்த ரஹானே விக்கெட்யை வீழ்த்த அடுத்த பந்திலேயே ரிங்கு சிங்கும் டக் அவுட் ஆனார்.

இந்த இரு விக்கெட்களின் மூலம் மொமண்டத்தைத் டெல்லியின் பக்கம் கொண்டு வந்தார் குல்தீப்.

128 ரன்களுக்கு 3 விக்கெட் என நன்றாகச் சென்று கொண்டிருந்த போட்டி, அடுத்த 35 ரன்களுக்குள் மொத்த விக்கெட்டுகளையும் விட்டு, 163 ரன்களுக்கே ஆல்-அவுட் ஆனது.

லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ‘வந்தோம், போனோம்’ என டூரிஸ்ட் மாதிரி வந்து சென்றார்கள். இதனால், டெல்லி 40 ரன் வித்தியாசத்தில் ஒரு ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது.

dc vs kkr
dc vs kkr

தொடரின் ஆரம்பத்தில் வரிசையாகக் கொல்கத்தா அணி தோல்வியைச் சந்தித்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியையும் பதிவு செய்தது. இருந்தாலும் பிளே-ஆஃப் செல்ல முடியாமல் 13 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் முடித்துள்ளது.

டெல்லி அணியும் அதே போன்ற கதைதான். கையில் இருந்த பல போட்டிகளையெல்லாம் கோட்டை விட்டதன் மூலம், 14 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் முத்தித்துள்ளது டெல்லி அணி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *