அவர்களுக்கு ஒரு பண்ணை வீட்டில் தங்கும்படி அழைத்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அவர்கள் பண்ணை வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு போலீசார் அவர்களது இருப்பிடத்தைக் கண்காணித்து கைது செய்தனர்.
ஜுல்பிகர் கும்பல் என்றும் அழைக்கப்படும் ‘Z’ கும்பல், தாவூத் இப்ராஹிமின் டி-கும்பல் போன்று செயல்பட்டதாகவும், மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அதோடு இக்கும்பல் பார்ட்டிகளில் போதைப்பொருள் சப்ளை செய்து வந்ததாகவும், அதற்கு ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரத்தாவிடம் இருந்து 3 ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரத்தா தன்மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார், அவற்றை அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளார். சிவா சர்மா தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர் ரூ. 20 லட்சம் கடனில் இருப்பதாகவும், பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் அவரது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகப் பேசியதாகவும் அவர் கூறினார். இது குறித்து அவர்களிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.