ஆவின் பச்சைப் பால் விற்பனை குறைப்பு: அன்புமணி கடும் எதிர்ப்பு|Why Is Aavin Cutting Green Milk Supply? Anbumani Asks

Spread the love

அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பாலின் விற்பனை விலை 900 மி.லி. ரூ. 50 ஆகும்.

கிரீன் மேஜிக் 500 மிலி உறைகளில் ரூ.22-க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மிலி உறைகளில் ரூ.25-க்கு விற்கப்பட்டது.

அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும்.

இதற்கு எதிராக பாமக குரல் கொடுத்ததால் ஆவின் நிறுவனம் அப்போது அந்த முயற்சியை கைவிட்டது.

ஆனால், இப்போது பச்சைப்பால் விற்பனையை மீண்டும் நிறுத்தத் துடிக்கிறது.

ஆவின் நிறுவனம் லாப நோக்கம் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு தரமான குறைவான விலையில் விற்பதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இந்த நோக்கத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படக்கூடாது.

ஆவின் பச்சைப் பால் விற்பனையை நிறுத்தும் திட்டத்தைக் கைவிட்டு, அதன் தடையற்ற வினியோகத்தை ஆவின் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *