Single Parent: Retirment பிளானிற்கு எதில் முதலீடு செய்யலாம்?| பணம் வளர்ப்போம்

Spread the love

வாழ்க்கை முழுவதும் ஓடி நிம்மதியாக உட்காருவது ‘ரிட்டயர்மென்ட்’ காலத்தில் தான். பிற பெற்றோர்களை விட, சிங்கிள் பேரன்டுகள் சற்று அதிகமாகவே ஓடியிருப்பார்கள். அதனால், அவர்களுக்கு ரிட்டயர்மென்ட் கால ஓய்வு மிக அதிகமாக தேவைப்படும்.

ஆக, அந்த ரிட்டயர்மென்ட் காலத்தை நிதி ரீதியாக எப்படி பிளான் செய்ய வேண்டும் என்பதை சொல்கிறார் குடும்ப நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.

“பொதுவாகவே, ரிட்டயர்மென்ட் பிளானிங் என்பது காஸ்ட்லியான நிதி இலக்கு. ஒவ்வொரு மாதம் எத்தனை செலவு ஆகிறது என்பதை வைத்து 30 ஆண்டுகளுக்கு கூட்டிப் பார்த்தால், அது ரிட்டயர்மென்ட் கார்ப்பஸ்.

லலிதா ஜெயபாலன்
லலிதா ஜெயபாலன்

அதை மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட் என அவரவர் தோதிற்கு ஏற்ப சேர்த்து வைக்கலாம்.

சிங்கிள் பேரன்டுகள் இந்தக் கார்ப்பஸை சேர்ப்பதோ, சொத்தைப் பெருக்குவதோ அவ்வளவு எளிது அல்ல.

ஒவ்வொரு நிதி அடியையும் பார்த்து, கவனமாக வைத்தால் தான், குழந்தைகளின் கல்விச் செலவு முதல் ரிட்டயர்மென்ட் பிளானிங் வரை அனைத்தும் ஸ்மூத்தாக இருக்கும்.

முடிந்தால், நிதி பிளானிங்கிற்கு நிதி ஆலோசகரைக் கூட சென்று பாருங்கள்.

பெரும்பாலும் பிள்ளையின் கல்யாண செலவும், ரிட்டயர்மென்ட் காலமும் ஒன்றாக தான் வரும்.

ஆடம்பரமாக கல்யாணம் செய்ய வேண்டும் என்று சேர்த்து வைத்திருக்கும் பணம் அனைத்தையும் பிள்ளையின் திருமண செலவுக்கு செலவழித்துவிடாதீர்கள்.

ஒரு நாள் ஆடம்பரம் மீதி காலத்திற்கு நிதி சிக்கலை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தி விடும்.

நிதி பிளானிங், நிதி சப்போர்ட்டை விட, சிங்கிள் பேரன்டுகளுக்கு மென்டல் ஹெல்த் மிக மிக முக்கியம். அது இருந்தால் தான் அனைத்து பிளானிங்கையும் பக்காவாக செய்து முடிக்க முடியும்.

அதனால், சிங்கிள் பேரன்டுகளே, இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *