ஆஸ்திரேலியாவின் `அதிரடி’ ஆட்டக்காரன் – ஓய்வை அறிவித்த மேக்ஸ்வெல்! – குட் பை மேக்ஸ் Glenn Maxwell Announces Retirement from Cricket

Spread the love

“மேக்ஸ்வெல்’ – எடுத்த முடிவு

அதிசயங்கள் நிகழ்வது மட்டுமில்லை, நிகழ்த்தவும் படும் என்பதற்கு சாட்சியாய் ,2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக “கிளேன் மேக்ஸ்வெல்” நிகழ்த்திய ஒரு மொரட்டு சம்பவம் தான் அது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் AFG vs AUS அணிகள் மோதிக்கொண்டன, 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்களை குவித்து இலக்காக வைத்தது, ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழக்க தோல்வி தான் என்ற சூழல் நிலவிய நிலையில்,128 பந்துகளில் 201* ரன்களை குவித்து (இதில் 21 பவுண்டரிகளும்,10 சிக்சர்களும் அடங்கும்) அணியை ‘தனி ஒருவனாக’ வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று, மிகச்சிறந்த மீட்பை நிகழ்த்தினார் மேக்ஸ்வெல்.

அந்த அதிரடிக்காரன் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரிய ‘ஷாக்’ தான். ஆஸ்திரேலிய அணிக்கான இவரது பங்களிப்பு மிகப்பெரியது. வழக்கத்திற்கு மாறான பேட்ஸ்மேனான இவர், தனது பிரமிக்க வைக்கும் ஷாட்கள், அதிரடியான ஆட்டத்தின் மூலம் போட்டியை வென்றும் கொடுக்கும் திறன் என்று கிரிக்கெட் ரசிகர்களை தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

மேக்ஸ்வெலின் அதிரடி பயணம் !

மேக்ஸ்வெல்லின் சர்வதேச கிரிக்கெட் பயணம், 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் தொடங்கியது. அதே வருடம் செப்டம்பர் மாதம் துபாயில், பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியிலும் களமிறங்கினார். தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹைதராபாத்தில், இந்தியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.

2016-ல் இலங்கைக் எதிரான டி20ஐ ஆட்டத்தில், ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி 65 பந்துகளில் 145*(14 பவுண்டரிகள்,9 சிக்சர்கள்) ரன்களை குவித்து ஆச்சரியப்படுத்தினார்.

2023-ன் ஒருநாள் உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிராக 44 பந்துகளில் 106(9 பவுண்டரிகள்,8 சிக்சர்கள்)ரன்கள் குவித்தார்.

அதே ஓடிஐ உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 128 பந்துகளில் 201* ரன்களை எடுத்து அசாதாரண சாதனையை நிகழ்த்தினார்.

மற்றும் 2017-ல் ராஞ்சியில் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 185 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தது என மேக்ஸ்வெல் நிகழ்த்திய சாதனைகளுக்கு சான்றுகளாகும்.

38 வயதான மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். 7 டெஸ்ட் போட்டிகள், 149 ஒருநாள் போட்டிகள் மற்றும் 130 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 3,990 ரன்களையும், டி20 போட்டிகளில் 2,897 ரன்களையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 339 ரன்களையும் அவர் குவித்துள்ளார்.மேலும் பவுலிங்கிலும், சர்வதேச அளவில் 136 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், ஆஸ்திரேலியாவின் ‘ஒயிட்-பால்’ அணிகளில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *