முதலமைச்சர் விஜய் கரூர் நிகழ்ச்சி… ஊடகங்களுக்கு திடீர் அனுமதி மறுப்பு! – Kumudam

Spread the love

முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் கரூர் நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியின் அரங்கை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முதலமைச்சராக பணி ஏற்ற பிறகு முதல்முறையாக கரூர் செல்கின்றார். கடந்த ஆண்டு கரூர் நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார். இதற்காக கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி விமானம் வந்தடைந்த நிலையில் சாலை வழியாக கரூர் செல்லகின்றார். அதனைத் தொடர்ந்து கரூர் வெண்ணை மலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் 5000 பேர் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார்.

இந்நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கரூர் ஆட்சியில் சார்பில் செய்தியாளர்களுக்கு தனி பாஸ் வழங்கிய நிலையில் தற்போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் நிகழ்ச்சி அரங்கில் இருந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை கரூர் மாவட்ட எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் நேரடியாக வந்து ஊடகவியலாளர்களை வெளியேற்றி உள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *