ரயில் நிற்காமல் எவ்வளவு வேகமாகச் செல்லுமோ, அந்த அளவுக்குப் படம் பார்க்கும் அனைவருக்கும் துளியும் கவனச் சிதறல் இல்லாமல் வேகமாக நகரும் கதை இது. ஐந்து மணி நேரத்தில் நடக்கும் பல்வேறு உணர்வுகள் இதில் உள்ளன.
பழிவாங்கல், கோபம், அகால மரணம், அழகான காதல், குழந்தைப் பிறப்பு எனப் பல உணர்வுகள் இப்படத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவை அனைத்தும் பார்வையாளர்களை முழுமையாகக் கட்டிப்போடும் என்று நம்புகிறேன்.
இவற்றையெல்லாம் தாண்டி, மிஷ்கின் சார் படங்களில் அழகாகவும் ஆழமாகவும் சொல்லப்படும் பேரன்பும் மனிதாபிமானமும் நிறைந்த படமாக இந்த ‘டிரெயின்’ இருக்கும்.

இசையமைப்பாளராக மிஷ்கின் மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். அவருக்கு இனி நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இந்த ரயில் பயணம் உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்து, உங்கள் சொந்த ரயில் பயண நினைவுகளையும் மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன்.” எனப் பகிர்ந்து கொண்டார்.