டோலிவுட் நடிகர் நிதின் நடிப்பில் தெலுங்குத் திரைப்படம் ‘அலியாஸ் ருக்மிணி’ டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை நடிகர் நானி தனது ‘வால்போஸ்டர் சினிமா’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நானி பேசியவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அவர் பேசுகையில், “டிசம்பர் 4-ஆம் தேதி ‘அலியாஸ் ருக்மிணி’ படத்திற்குச் சென்று, ஒரு அழகான படத்தைப் பார்த்தோம் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படாமல் திரையரங்கிலிருந்து வெளியே வந்தால், நான் இனிமேல் படம் தயாரிப்பதையே நிறுத்திவிடுவேன்.
இது பிராமிஸ். நான் இந்தப் படத்தில் தயாரிப்பாளராக இணைந்திருக்காவிட்டாலும், படத்தைப் பார்த்த பிறகு இதை நிச்சயம் புரரொமோட் செய்ய விரும்பியிருப்பேன்.

‘எனக்கு ஏதாவது உதவி செய்ய முடிந்தால் என்னைப் பயன்படுத்துங்கள், ஏதேனும் என்றால் கூப்பிடுங்கள்’ என்று கேட்டிருப்பேன். அந்த அளவுக்கு ஒரு நல்ல படத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்தப் படத்தின் தயாரிப்பாளராக இருப்பது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்” எனப் பேசியிருக்கிறார்.