‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் வெளியான படம் ‘இதயம் முரளி’. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தத் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சக்சஸ் மீட் இன்று (ஜூலை.17) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கயாடு லோஹர், “தமிழில் நான் முதல் முறையாக ஒப்பந்தமான படம் ‘இதயம் முரளி’தான். அதனால் இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.
இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி ஆகாஷ். மக்கள் நிறைய அன்பைக் கொடுத்திருக்கிறீர்கள். அமுதா கதாபாத்திரம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்தக் கதாபாத்திரத்தை என்னை நம்பிக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி.
மீண்டும் இதே படக்குழு இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆகாஷிடம் கேட்டுக்கொள்கிறேன்.
ப்ரீத்தி இந்தப் படத்தில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நம்முடைய நட்பு குறித்து உங்களுக்கே தெரியும்.

இதயா (அதர்வா) இந்தப் படத்தில் இருவரும் இணைந்து அதிக இடங்களில் நடிக்கவில்லை என்றாலும் நாம் இணைந்து வரும் காட்சிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
மீண்டும் நாம் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும். இந்தப் படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கு ரொம்ப நன்றி” என்று பேசியிருக்கிறார்.