“இதற்கு அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கி இருக்கலாம்” – விஜய்யைச் சாடிய சீமான் | made that astrologer the Chief Minister instead” – Seeman lashes out at Vijay

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது.

நாம் தமிழர்க கட்சி வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு.கார்த்திகா ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மு.கார்த்திகாவை ஆதரித்து சீமான் நேற்று பிரசாரம் செய்தார்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

அப்போது பேசிய அவர், “இந்த ஆட்சியில் “நோ’ ரூல்ஸ் எல்லாம் ரீல்ஸ்தான். ஜெயிலுக்கு எதற்கு சென்றார் எனத் தெரியவில்லை. யாரோ ஒரு ஜோசியக்காரர் சொல்லியிருக்கிறார் ஜெயிலில் உங்களுக்கு ஒரு கண்டம் இருக்கிறது போய் கை நினைத்துவிட்டு வாருங்கள் என்று…

உங்களுக்குத் திருஷ்டி அதிகமாக இருக்கிறது. கருப்பு கோட் போட்டுக்கொள்ளுங்கள், நெற்றியில் கருப்புப் பொட்டு வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கு அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கி இருக்கலாம். கடற்கரையைப் பார்த்த மாதிரி இருக்க வேண்டும். அதுதான் உங்கள் ராசிக்குச் சரியாக இருக்கும் என்று சொன்னவுடன் அலுவலகத்தையே அங்கு மாற்றுகிறார்” என்று முதல்வர் விஜய்யை சீமான் சாடியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *