ஈரான், அமெரிக்கா இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க அட்சயதிருதியை இன்னும் சில தினங்களில் வர உள்ளது. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் விலை ரூ.260 விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து ரூ. 1,13,760-க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 5,000 அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
