“இதுக்கு முன்னாடி பல ஆடிஷன் அட்டென்ட் பண்ணியிருக்கேன். ஆனா…” – ‘கனா கண்டேனடி’ டீம் |”I’ve attended many auditions before. But…” – The ‘Kanaa Kandenadi’ team

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் “கனா கண்டேனடி’ சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களான ஜாய்சன் மற்றும் சைத்ராவிடம் பேசினோம். ‘கனா கண்டேனடி’ சீரியலில் அறிமுகமாகியிருக்கும் ஜாய்சன் அவரது முதல் சீரியல் அனுபவத்தைப் பற்றிப் பேசினார்.

அப்போது பேசியவர், “ஐ.டி துறையிலிருந்து தற்போது சீரியல் துறைக்கு வந்துள்ளதால் நான் இதை முழுவதுமாக லேர்னிங்காகத்தான் பார்க்கிறேன். இதற்கு முன்னாடி சில யூடியூப் சேனல்களிலும் ஷார்ட் ஃபிலிம்களிலும் நடிச்சிருக்கேன்.

என்னோட யூடியூப் அனுபவத்திற்கு சீரியல் பயணம் முழுவதுமாக வேற மாதிரி இருக்கு. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் கத்துக்கிட்டு இருக்கேன். சீரியல்ல நடிக்கணும்னு ஐ.டி வேலையை விட்டுட்டு ரிஸ்க் எடுத்துத்தான் வந்திருக்கேன்.

Kana Kandenadi Pair Interview

Kana Kandenadi Pair Interview

எனக்கு இந்த துறை பிடிச்சிருக்கிறதால, பண்ற எல்லாத்தையும் பிடிச்சு பண்றேன். எனக்கு சீரியல்ல பிராம்ப்டிங் கொஞ்சம் சரியாக வரல. எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் டைரக்டர்கூட பேசி அதைச் சரியாகப் பேசிடுவேன்.

இந்தச் சீரியல் டீம் நான் நடிக்கணும்னு என்னை செலக்ட் பண்ணினது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆடிஷன் வரும்போது நான் எதுவும் பெருசா எதிர்பார்க்கல.

இதுக்கு முன்னாடி பல ஆடிஷன் அட்டென்ட் பண்ணியிருக்கேன். ஆனா எதுலயும் ரிப்ளை வந்ததில்ல. ஆனா, இந்தச் சீரியல் ஆடிஷன் பண்றப்போ நான் நல்லா நடிக்கிறேன்னு பாராட்டுனாங்க. அப்போதான் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இந்தச் சீரியல்ல, வனஜா மேம்கும் எனக்கும் ஒரு நல்ல பாண்டிங் இருக்கும்.

மேம்கூட பேசும்போது, முன்னாடி எல்லாம் எப்படி சீரியல் எடுத்தாங்க, அப்போ சீரியல் துறை எப்படி இருந்தது, இப்ப எப்படி எடுக்கிறாங்க என்கிற வித்தியாசம், பிராம்ப்டிங்னு சீரியல் பற்றி நிறைய விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. அதெல்லாம் கேட்கும்போது ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *