அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசைக் கண்டித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவில், “வெளிசந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று வார்த்தை ஜாலம் காட்டியது தவெக அரசு.
இந்நிலையில் கடந்த வாரம் சுமார் 250 டன் வெங்காயம் வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, சரக்கு ரயில் மூலமாக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, கொருக்குப்பேட்டையில் உள்ள கிடங்கில் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக இந்த வெங்காயம் லாரிகளில் இருந்து கீழே இறக்கப்படாததால் அத்தனையும் அழுகி வீனாகி வருவதாக செய்திகள் தெரிய வருகிறது.

250 டன் அழுகிய வெங்காயத்துடன் கடந்த 3 நாட்களாக 10 லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
இதுமட்டுமன்றி, #NAFED மூலம் நான்காம் கட்டமாக கொள்முதல் செய்து வரவழைக்கப்பட்ட 450 டன் வெங்காயம் தரமில்லாமல் இருந்ததால் பெற்றுக்கொள்ளவில்லை என்று தமிழக அரசும், தங்களுக்குத் திருப்பி அனுப்பப்படவில்லை என்று #NAFED தரப்பிலும் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.