‘இது எளிதான முடிவு அல்ல, மன அமைதியுடன் நான் விடைபெறுகிறேன்.!’- ஹர்மன்ப்ரீத் கவுர் எமோஷனல் | harmanpreet kaur emotional note on steps down india captaincy

Spread the love

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹர்மன்ப்ரீத் கவுர் அறிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவங்களின் கேப்டன் பொறுப்புகளில் இருந்தும் நான் விலகுகிறேன். இது எளிதான முடிவு அல்ல.

இதில் என் வாழ்நாள் முழுவதும் என்னோடு நிலைத்திருக்கும் பல ஆண்டுகளின் நினைவுகள், உணர்வுகள், தியாகங்கள் மற்றும் தருணங்கள் அடங்கியுள்ளன.

ஹர்மன்ப்ரீத் கவுர்

ஹர்மன்ப்ரீத் கவுர்

இந்திய மகளிர் அணிக்காக என் ரத்தம், வியர்வை, நேரம் என அனைத்தையும் கொடுத்தேன். ஒரு கேப்டனாக, நான் சில கடினமான முடிவுகளை எடுத்திருக்கிறேன்.

நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் இந்திய அணியை சிறப்பாக மாற்றுவதற்காகத் தான். மிகவும் மோசமான தருணங்கள், மனமுறிவுகள், விமர்சனங்கள், சந்தேகங்கள் போன்ற நாட்களை நான் பார்த்திருக்கிறேன்.

அதே சமயம் மிகச்சிறந்த தருணங்களையும் அனுபவித்திருக்கிறேன். உணர்வுகள் நிறைந்த இதயத்துடன், அதே வேளையில் மன அமைதியுடன் இன்று நான் கேப்டன் பொறுப்பில் இருந்து விடைபெறுகிறேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *