‘முன்னாள் அமைச்சர் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாதா?’ – என்ன சொல்கிறார் மனோ தங்கராஜ்? |“Can’t a Former Minister Join a Protest?” – What Does Mano Thangaraj Say?

Spread the love

இந்த வழக்கம் கூட அரசுக்கும் காவல்துறைக்கும் தெரியவில்லை. என்னுடைய அரசியல் சட்ட பாதுகாப்பு இயக்கத்தின் ஆதரவை போராடும் செவிலிய சங்கத்தினர் கோரினர். அதனால் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டேன். முன்னாள் மந்திரியாக இருந்தால் எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ளக் கூடாதா? ஒரு ஜனநாயக சக்தியாக முன்பும் எத்தனையோ போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். அதேமாதிரிதான் இந்தப் போராட்டத்திலும் கலந்துகொண்டேன். எந்தப் போராட்டத்தையும் தூண்டிவிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்

செவிலிய சகோதரிகள் சமவேலைக்கு சம ஊதியம் உட்பட அடிப்படைக் கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகள்தான் இங்கே கவனம் பெற வேண்டும்’ என்றவரிடம்,

‘கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் செவிலியர்களின் கோரிக்கை ஏன் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை?’ என்றேன்,

‘கடந்த காலத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். இப்போதுள்ள கதையை பேசுங்கள். நான் பால்வளத்துறை அமைச்சராக இருந்தேன். அந்தத்துறை சார்ந்த போராட்டத்தில் கலந்துகொண்டால் கூட குறைசொல்லலாம். இப்போது ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள் என புரியவில்லை. போராடும் உரிமையும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் உரிமையும் எல்லாருக்கும் இருக்கிறது. இந்த அரசுதான் திறனற்று செயல்பட்டிருக்கிறது. காலையில் இடைத்தேர்தலை வைத்துக்கொண்டு தலைநகரில் நடு இரவில் நான்காயிரத்துக்கும் அதிகமான பெண்களை கைது செய்ய துணிந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இவர்களின் நிர்வாகத் திறனற்றத் தன்மை அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *