"இது சினிமா கிடையாது; Scene பண்ணுவதற்கு"- தவெக அரசை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்

Spread the love

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜூலை.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

“நீட் போராட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள், நிலைப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பன குறித்து ஓட்டு போட்ட தமிழக மக்கள்தான் சொல்ல வேண்டும்.

இன்று நாங்கள் தொகுதிக்குச் செல்கிறோம், ஆய்வு செய்கிறோம், அதிகாரிகளைச் சந்திக்கிறோம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எந்த ஒரு அடிப்படை வேலைகளையும் அவர்கள் ஆரம்பிக்கவில்லை. ஏறக்குறைய 3 மாதங்கள் முடியப்போகின்றன.

இது ஒன்றும் சினிமா கிடையாது. சீன் பண்ணுவதற்கு, ரீல்ஸ் போடுவதற்கு, புகைப்படங்கள் எடுப்பதற்கு… கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசு மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

நிச்சயமாக இந்த அரசாங்கம் நல்ல அரசாங்கமா? என்பதற்கான பதிலை மக்கள்தான் சொல்ல வேண்டும். என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று பேசியிருக்கிறார்.

படத்தைப் பார்த்து அழுத முகமது பர்வேஸ்
படத்தைப் பார்த்து அழுத முகமது பர்வேஸ்

தொடர்ந்து ‘ஜன நாயகன்’ படத்தைப் பார்த்து அழுத அமைச்சர்கள் குறித்த கேள்விக்கு, “மக்கள் பிரதிநிதிகள் ‘ஜன நாயகன்’ படத்தைப் பார்த்து கண்ணீர்விடாமல் மக்கள் பணியில் ஈடுபடுங்கள். மக்கள் பிரதிநிதிகள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *