கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
சுந்தர் சி – குஷ்பு தயாரிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் கேத்திகா ஷர்மா, யூடியூபர் ஹர்ஷத் கான், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் ஹர்ஷத் கான், “2017-ல் “மீசைய முறுக்கு’ முதல் பாகம் வெளியானபோது, அது கல்லூரி இளைஞர்களின் வாழ்க்கையையும் காதலையும் மிகச் சரியாகப் பிரதிபலித்த படமாக அமைந்தது. இப்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இது அவசர அவசரமாக லாபத்திற்காக எடுக்கப்பட்ட கதையல்ல. இந்த 9 ஆண்டுகளில் திரையுலகில் ஏற்பட்ட மாற்றங்கள், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களைச் சேகரித்து ஆதி அண்ணன் உருவாக்கியுள்ள திரைக்கதை இது. இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான மிக முக்கிய விஷயங்களைத் தைரியமாகப் பேசியுள்ளார்.