‘இதெல்லாம் ஒரு ரோல்லா? கேரக்டரா?.!’- மம்மூட்டியின் பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த தனுஷ் | mammootty speech at om movie audio launch

Spread the love

“அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓம்’. இப்படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். செம்மரக் கடத்தல் பின்னணியில் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய மம்மூட்டி, “இந்தப் படத்தில எனக்கு பெருசா டயலாக் இல்ல. எல்லா சீன்லையும் கணேஷா, தண்டியப்பான்னு கூப்பிட்டுகிட்டே இருக்கணும். வேற டயலாக் எதுவும் கிடையாது. அவரை அடி, இவரை அடின்னு சொல்லனும், இதெல்லாம் ஒரு ரோல்லா? கேரக்டரா? ஆறு மாசமா இதைத்தான் பண்ணிட்டு இருந்தேன்” என்று பேச தனுஷ் குழுங்கிச் சிரித்தார்.

தொடர்ந்து பேசிய மம்மூட்டி, “தமிழ்-ல கிட்டத்தட்ட 20 படங்கள் நடிச்சிருக்கேன். ரொம்ப கம்மி படங்கள்ல நடிச்சிருந்தாலும்கூட தமிழ் ஆடியன்ஸ்க்கு என்ன தெரியுது. நீங்க என்னுடைய மலையாளப் படங்களைப் பார்க்கிறது, எனக்கு கைதட்டல் கொடுக்கிறதெல்லாம் ரொம்ப சந்தோஷம்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *