இந்தியர்களை போல எதிரிகள்தான்.. POK-வில் 32 பேர் கொல்லப்பட்டது பற்றி பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு | “They are enemies, just like Indians” – Pakistan Minister controversial remarks following incident where 32 died

Spread the love

International

oi-Mani Singh S

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெரும் பதற்றம் நிலவுகிறது. போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடந்த 2 நாட்களில் மட்டும் 32 பேர் கொல்லப்பட்ட நிலையில், இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிம் கூறிய கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. உயிரிழப்பு குறித்து கொஞ்சம் கூட பரிவு இன்றி, போராட்டக்காரர்கள் இந்தியர்களை போல எதிரிகள் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சமீப காலமாக போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு அமைதியின்மை நீடித்து வருகிறது.

Pakistan Minister controversial remarks following incident where 32 died

எதிரிகளாகவே நாங்கள் பார்க்கிறோம்

கடந்த மாதம் ஜூன் 05 ஆம் தேதி முதல் வெடித்துள்ள போராட்டத்தால் அங்கு இதுவரை 90 பேர் பாகிஸ்தான் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள்னர். பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்வதேச நாடுகளை அதிர வைத்தது. போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஜேஎம்.எம்.சி கூட்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த இரு மாதங்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப் கூறிய கருத்து போராட்டக்காரர்களை கொதிக்க வைத்துள்ளது. காவ்ஜா ஆசிப் கூறுகையில், “போராட்டக்காரர்களை இந்தியர்களை போல எதிரிகளாகவே நாங்கள் பார்க்கிறோம். சுதந்திர காஷ்மீர் கோரி போராடுபவர்களை இந்தியாவை வைத்து இருக்கும் அதே இடத்தில்தான் நான் வைத்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 53 தொகுதிகளை கொண்ட இந்த பகுதியில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன் தினம் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று ஜேஏஏசி உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில், அங்குள்ள ராவலாகோட் பகுதியில் இருக்கும் டிரேக் எய்த் உள்ளிட்ட பகுதிகளில் 27 ஆம் தேதி தீவிர போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில், ஜேஏஏசியின் முக்கிய நிர்வாகி உள்பட உமர் நசீர் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். இது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் முதல் இதுவரை போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 100 ஐ நெருங்கியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *