இந்தியாவில் எப்போது குறையும் பெட்ரோல், டீசல் விலை? எல்லாம் அமெரிக்கா கையில்தான் இருக்கு! ஈரான் வைத்த செக் | India Oil Price: Will the US Accept Iran’s 7 Conditions to Reopen the Strait of Hormuz?

Spread the love

International

oi-Halley Karthik

தெஹ்ரான்: ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால், இந்தியாவுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் போதுமான அளவில் கிடைக்கவில்லை. இப்படி இருக்கையில், இந்த நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் எனில், அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளை ஈரான் போட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்குமா? நீரிணை திறக்கப்படுமா? இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை அரபு நாடுகளிடமிருந்துதான் வருகிறது. எண்ணெய்யை ஏற்றி வரும் கப்பல்கள், ஹார்முஸை தாண்டிதான் வர வேண்டும். ஆனால், இப்போது ஹார்முஸில் நிலைமை சரியில்லை.

India Oil Price

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக.. ஈரானுடன், அமெரிக்கா ஏழரையை கூட்டியதால், ஹார்முஸில் பயணிக்கும் கப்பல்களை ஈரான் ஆதரவு படைகள் தாக்கி வருகின்றன. எனவே, கச்சா எண்ணெய் போக்குவரத்து உலகம் முழுவதும் அடிவாங்கியிருக்கிறது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருக்கிறது. இந்த நிலைமை எப்போது சரியாகும்? அமெரிக்கா இனியாவது சைலண்ட்டாக இருக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஹார்முஸ் பழையபடி திரும்ப வேண்டும் எனில், அமெரிக்கா எங்களுடைய கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என, 7 கோரிக்கைகளை அடுக்கியிருக்கிறது.

1. ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்பட வேண்டும்.
2. வெளிநாடுகளில் அமெரிக்கா முடக்கி வைத்திருக்கும் ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும்
3. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்
4. போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
5. லெபானான் உள்ளிட்ட பகுதிகளில், அனைத்து முனைகளிலும் நடக்கும் சண்டையை நிறுத்துவது
6. இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்ட 6வது நாளில் ஹார்முஸ் திறக்கப்படும். இது நடந்த அடுத்த நாள், இறுதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

என தனது 7 நிபந்தனைகளில் 6ஐ ஈரான் வெளியிட்டிருக்கிறது. 7வது நிபந்தனையை இன்னும் அறிவிக்கவில்லை. முதலில் இந்த 6-ஐ அமெரிக்கா நிறைவேற்றுகிறதா? என்பதை பார்க்க வேண்டும். தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க சொன்னால் கூட.. டிரம்ப் அதை செய்வாரே தவிர, இந்த நிபந்தனைகளில் ஒன்றை கூட அவர் நிறைவேற்றமுன்வர மாட்டார் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதையெல்லாம் மீறி, எங்கள் மீது தாக்குதல் நடத்தினால்.. நிலைமை கையை மீறி போய்விடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. அதாவது ஈரான் மீது குண்டு வீசுவதற்காக ஐரோப்பிய நாட்டிலோ அல்லது வேறு ஏதேனும் தொலைதூர பகுதியிரோ உள்ள அமெரிக்க ராணுவ தளத்திலிருந்து அமெரிக்க விமானங்கள் புறப்பட்டால் அந்த தளங்களையும் நாங்கள் தாக்குவோம் என்று ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெசாய் கூறியிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தியை வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *