இதனைத் தொடர்ந்து, கோவை வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குநர் ஸ்ரீதர், கரூரிலிருந்து சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் இங்கிலாந்துக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கொடியசைத்து முதல் சுதந்திர வர்த்தக ஏற்றுமதியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன், கரூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ் மற்றும் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கௌரவத் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குநர் ஸ்ரீதர்,
“இங்கிலாந்து- இந்தியா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த வரிவிலக்கு ஒப்பந்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், இனிவரும் ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். கடந்த ஆண்டில் ரூ. 800 கோடி மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் கரூரிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.