இந்தியா கூட்டணி பேரணி: “சூப்பர் பிளாப் பேரணி” – விமர்சிக்கும் பாஜக| INDIA alliance rally: A “super-flop rally,” says the BJP

Spread the love

தேர்தல் நடைமுறைகளில் “வாக்குத் திருட்டு” (Vote Chori) நடைபெறுவதாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியை ராஜினாமா செய்யக் கோரி “இந்தியா’ கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று பிரம்மாண்ட போராட்டப் பேரணியை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் இல்லத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, சி.பி.ஐ.(எம்) தலைவர் எம்.ஏ. பேபி, சி.பி.ஐ. தலைவர் டி. ராஜா, சி.பி.ஐ.(எம்.எல்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் பி.டி.பி. தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஒன்று திரண்டனர்.

இந்தியா கூட்டணி பேரணி

இந்தியா கூட்டணி பேரணி

அங்கிருந்து புறப்பட்டு மின்டோ சாலைக்கு வந்து, டெல்லி மின்டோ சாலை – கான்ஃபாட் பிளேஸ் சந்திப்பிலிருந்து திறந்தவெளி வாகனத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ராம்லீலா மைதானத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். “வாக்கைக் காப்போம், தேசத்தைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் தொடங்கிய இந்த எதிர்ப்புப் பேரணியில், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் கொடிகளையும் பேனர்களையும் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் திரளாகக் கலந்துகொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *