சிவகங்கை: துபாயில் தகவல் தொடர்பு துண்டிப்பு; கொல்கத்தாவில் வழிப்பறி- மீண்டது எப்படி? 18 நாள் திகில்!| 18 Days of Fear: Sivaganga Man Cut Off in Dubai, Robbed in Kolkata – How Did He Return

Spread the love

வெளிநாட்டில் உழைத்துவிட்டுத் தாயகம் திரும்பும் ஆசையில் விமானம் ஏறக் காத்திருந்த கணவர் திடீரென மாயமானதால், 18 நாள்களாகக் கண்ணீரோடு தவித்த மனைவிக்கு, மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் கணவர் பத்திரமாக வீடு திரும்பியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்பேனியா டு தாயகம்:

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகேயுள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் முனீஸ்வரி (35). இவரது கணவர் பெரியசாமி (43), குடும்பச் சூழல் காரணமாகக் கடந்த 2023-ம் ஆண்டு அல்பேனியா நாட்டுக்குக் கட்டட வேலைக்காகச் சென்றிருந்தார். மூன்று ஆண்டுக்கால உழைப்புக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 19-ம் தேதி அல்பேனியாவிலிருந்து ஊருக்குத் திரும்புவதாகத் தனது மனைவி முனீஸ்வரிக்குக் கைப்பேசி மூலம் மகிழ்ச்சியுடன் தகவல் தெரிவித்தார்.

துபாய் விமான நிலையத்தில் துண்டிக்கப்பட்ட தொடர்பு:

அன்றைய தினம் இரவு துபாய் விமான நிலையம் வந்து சேர்ந்த பெரியசாமி, அங்கிருந்து அதிகாலை 2 மணிக்கு கொல்கத்தா செல்லும் இணைப்பு விமானத்தில்  ஏறுவதற்காகக் காத்திருப்பதாக மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அதன் பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை; தொலைபேசித் தொடர்பும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. விமானம் ஏற வேண்டிய கணவர் என்ன ஆனார் எனத் தெரியாமல் முனீஸ்வரியும், அவரது குடும்பத்தினரும் நிலைகுலைந்து போயினர்.

ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை:

கணவரைத் தேடி அலைந்து தவித்த முனீஸ்வரி, தனது குடும்பத்தினருடன் சென்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  ஆகாஷிடம் கடந்த நவம்பர் 2-ம் தேதி கண்ணீர்மல்க மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், உடனடியாக அல்பேனியா மற்றும் துபாய் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். மத்திய , மாநில அரசுகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளார். இந்த நிலையில் மாயமானதாகக் கருதப்பட்ட பெரியசாமி கடந்த நவம்பர் 6-ம் தேதி பத்திரமாகத் தனது சொந்த ஊரான அய்யம்பட்டிக்கு வந்து சேர்ந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *