இந்திய பைலட் ஸ்மித் நெற்றியில் முத்தமிட்டு UAE இளவரசர் சொன்ன வார்த்தை.. ரொம்ப பெருமையா இருக்கு | UAE crown prince meets flydubai Indian pilot Smit machchhar in Hospital and kiss his forehead

Spread the love

International

oi-Nantha Kumar R

துபாய்: துபாய் – டெல்அவிவ் விமானத்தில் கத்துக்குத்து காயமடைந்தாலும் விமானம் கடத்தலை தடுத்து ஹீரோவான இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர்சந்தித்து நலம் விசாரித்து நெற்றியில் முத்தமிட்டார் வாழ்த்து தெரிவித்தார்.

uae-crown-prince-meets-flydubai-indian-pilot-smit-machchhar-in-hospital-and-kiss-his-forehead

இந்திய பைலட் ஸ்மித் மச்சார் தற்போது துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மருத்துவமனைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் இன்று சென்றார். பைலட் ஸ்மித் மச்சார் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

விரைவில் பூரண குணமடைய வாழ்த்தினார். அதுமட்டுமின்றி அவரது செயலை பாராட்டியதோடு தனது அன்பை காட்டும் வகையில் நெற்றியில் முத்தமிட்டார். இதுதொடர்பான போட்டோவை ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ”எங்கள் தரப்பில் இருந்தும், எங்களின் நாட்டின் சார்பிலும் அவருக்கு (இந்திய பைலட் ஸ்மித் மச்சார்) முழுமையான பாராட்டுகளையும், அவரது செயலுக்கான அங்கீகாரமும் அளிக்கப்படுகிறது. அவர் எங்கள் நாடு மற்றும் எங்களின் டீமின் ஒரு பகுதியாக இருக்கிறார். கருணை, அமைதி மற்றும் வாழ்வு உள்ளிட்டவற்றை முன்னிறுத்தும் ஐக்கிய அரபு அமீரகங்களின் அடையாளமாக அவர் இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *