Only one person passed the test at the automated, computerized driving test track in Thoothukudi in a single month-தூத்துக்குடி தானியங்கி ஓட்டுநர் தேர்வு தளத்தில் ஒரே மாதத்தில் ஒரே ஒரு நபர் மட்டுமே தேர்ச்சி

Spread the love

தமிழக அரசு போக்குவரத்துத்துறையின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்  மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்றால் மட்டுமே வாகனங்களை ஓட்ட முடியும். நான்கு சக்கர வாகனம் ஓட்டிட உரிமம் விரும்புவோர், முன்னதாக மோட்டார் வாகன ஆய்வாளர்  முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும். போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கிறாரா என்பதை ஆய்வாளர் நேரில் பார்த்து உரிமம் வழங்குவது பழைய நடைமுறை.

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் தானியங்கி கணினி மூலம் ஓட்டுநர்களைத் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 2025 – 2026ஆம் ஆண்டு மோட்டார் வாகனத் திட்டத்தின் கீழ், ரூ.22.11 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி

இந்தத் தளத்தில் வாகனம் ஓட்டும்போது விளிம்புக் கோட்டில் மோதாமல் செல்லுதல், முன்னோக்கிச் செல்லுதல், நிறுத்துதல், சரியான பாதையில் இயக்குதல் ஆகிய அனைத்தையும் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள சென்சார்கள்  மற்றும் சிசிடிவி  கேமராக்கள் கண்காணிக்கும்.

இதில் போக்குவரத்து விதிமுறைகள் சிறிதளவு மீறப்பட்டாலும், கணினி உடனடியாக “தோல்வி’ என்று காட்டிவிடும். இதில், மோட்டார் வாகன ஆய்வாளரோ அல்லது வட்டாரப் போக்குவரத்து அதிகாரியோ எந்த மாற்றமும் செய்ய முடியாது. 

இந்தத் தானியங்கி தேர்வு தளத்தில் “H” வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் ஓடுதளத்தின் மையப்பகுதி, அரசு விதிகளின்படி மிகக் குறைவாக, அதாவது 3.5 மீட்டர் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *