Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: சிஎஸ்கே அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹர் ரிலீஸ் செய்யப்படாதது ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. ரூ.5.20 கோடிக்கு வாங்கப்பட்ட ராகுல் சஹர், சிஎஸ்கே அணிக்காக ஒரு சில போட்டிகளில் மட்டுமே ஆடினார். அந்தப் போட்டிகளில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாத சூழலில், ராகுல் சஹர் ரிலீஸ் செய்யப்படாதது ஏன் என்பதை பார்க்கலாம்.
சிஎஸ்கே அணி தரப்பில் நேற்றிரவு ரிடென்ஷன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தோனி, பிரசாந்த் வீர், மேட் ஹென்றி உட்பட 11 வீரர்கள் விடுவிக்கப்பட்ட சூழலில், சுழற்பந்துவீச்சாளரான ராகுல் சஹர் தக்க வைக்கப்பட்டார். கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக சில போட்டிகளில் மட்டுமே ராகுல் சஹர் ஆடி இருந்தார்.

இம்பேக்ட் பிளேயராக சில போட்டிகளில் ராகுல் சஹர் களமிறக்கப்பட்ட போதும், சிஎஸ்கே அணியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் ராகுல் சஹர் நிச்சயமாக ரிடெய்ன் செய்யப்பட மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ராகுல் சஹரை ரூ.5.2 கோடிக்கு சிஎஸ்கே அணி தக்க வைத்து கொண்டுள்ளது.
சிஎஸ்கே அணி தக்க வைத்தது ஏன் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இதுதொடர்பாக விசாரிக்கையில், ராகுல் சஹருக்கான டிமாண்ட் இன்னும் மார்க்கெட்டில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் மினி ஏலத்தில் இந்திய ஸ்பின்னர்கள் பெரிதாக வரப் போவதில்லை. அதற்கேற்ப எந்த அணியும் இந்திய ஸ்பின்னர் யாரையும் விடுவிக்கவில்லை.
குறிப்பாக மும்பை, டெல்லி அணிகள் இந்திய ஸ்பின்னருக்காக ஏலத்தில் காத்து கொண்டிருக்கின்றன. இதனால் சிஎஸ்கே அணி ராகுல் சஹரை விடுவிக்க விரும்பவில்லை. ராகுல் சஹர் ஏலத்திற்கு செல்வதால், சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பின்னடைவு தான். அவரால் சேப்பாக்கம் மைதானத்தில் எந்த லெந்தில் பவுலிங் செய்வது என்பதை இன்னும் கிராக் செய்ய முடியவில்லை.
ஒருவேளை இந்த சீசனில் அதனை கிராக் செய்துவிட்டால், சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும். கிட்டத்தட்ட சான்ட்னர் போல் ராகுல் சஹரை சிஎஸ்கே நிர்வாகம் பயன்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ராகுல் சஹர் சொந்த வாழ்க்கையில் அனுபவித்த பிரச்சனைகளில் இருந்து இப்போதுதான் மீண்டு வருகிறார். அவர் கம்பேக் கொடுக்க நேரம் அளிக்க வேண்டும் என்பதும் சிஎஸ்கே அணியின் எண்ணமாக பார்க்கப்படுகிறது.