பில்கிஸ் பானு வழக்கு: இரு குற்றவாளிகளுக்கு ஜாமீன்; எதிர்த்து போராடுவேன் என அறிவிப்பு!|‘I Am Scared Once Again’: Bilkis Bano on SC Bail Order

Spread the love

2002-ம் ஆண்டு பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரைக் கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளில் இருவரின் தண்டனையை நிறுத்தி வைத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த அக்டோபர் 28-ம் தேதி ஜாமீன் வழங்கியது.

இது குறித்து நீதிமன்றம் பில்கிஸ் பானுவுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

பில்கிஸ் பானு

பில்கிஸ் பானு

“வலி, அதிர்ச்சி மற்றும் நம்பமுடியாத சூழலால் கண்களில் வழியும் கண்ணீருடனும், வார்த்தைகள் திக்கித் திணறுவதும்தான் இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன்.

என்னை அழைக்காமலும், என் தரப்பு வாதத்தைக் கேட்காமலும் உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை—இரண்டாவது முறையாக—இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்பதை என்னால் இப்போதும் நம்ப முடியவில்லை.

செய்தித்தாள்கள் மூலமாகத்தான் இந்த விஷயத்தையே நான் தெரிந்துகொண்டேன்.

என் உலகம், என் கைக்குழந்தை, என் குடும்பம், என் வீடு, மனிதநேயத்தின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை என அனைத்தும் என்னிடமிருந்து கொடூரமாகப் பறிக்கப்பட்டபோது எனக்கு வயது வெறும் 19.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *