ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததிலிருந்து பல்வேறு கொலைச் சம்பவங்கள், குற்ற நிகழ்வுகள் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் நேரடியாக ஈடுபடுகின்றனர். “நாம் எந்தக் குற்றம் செய்தாலும், குழந்தைகளுக்கு எதிரான அநீதிகளைச் செய்தாலும் இந்த ஆட்சி நம்மைக் காப்பாற்றும்’ என்ற திமிருடனும் தெனாவட்டுடனும் அவர்கள் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியில் இருப்பவர்களும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கோ பாதுகாப்பதற்கோ கவனம் செலுத்தாமல், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதிலேயே தீவிரமாக உள்ளனர். முன்னதாக ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு, `தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, இது நாடா அல்லது காடா?’ எனக் கேள்விகளைக் கேட்டு, `நான் ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் மாற்றிவிடுவேன்’ என்று வாக்குறுதி அளித்தார்.

ஆனால், அன்று கேட்கப்பட்ட அதேகேள்வி இப்போதும் இருக்கிறதே… அதனால்தான் இன்று திமுக தலைவரும் அதே கேள்வியை கேட்டிருக்கிறார். அரசு சார்பில் ‘தாய்மாமன் சீர்’ திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. ஆனால், காப்பாற்ற வேண்டிய தாய்மாமனைக் காணவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா என்றும் தெரியவில்லை. முதலில் அவர்தான் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதை நம்ப வேண்டும். மக்களை, முக்கியமாகக் குழந்தைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
இன்றைய சூழலில் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் ஆபத்து, வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் ஆபத்து என்ற பயத்துடன்தான் பொதுமக்கள் வாழ்கின்றனர். இந்த ஆட்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குமே ‘திக் திக்’ நிமிடங்களாக மாறிவிட்டன.” எனத் தெரிவித்திருக்கிறார்.