இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்; ஓய்வுபெற 2 ஆண்டுகள் உள்ள நிலையில் அதிரடி!

Spread the love

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டக் குற்றப் பதிவேடுகள் பிரிவு (DCRB) காவல் ஆய்வாளராக இருந்தவர் டி.கே.வினோத் கிருஷ்ணா. இவர் முன்பு இலவும்திட்டா காவல் ஆய்வாளராகப் பணியாற்றியபோது, பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இப்பழக்கம் நெருக்கமாக மாறியதை அடுத்து, பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பிறகு, அப்பெண்ணை சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்வதாக வினோத் கிருஷ்ணா வாக்குறுதி அளித்திருந்தார்.

​தேர்தல் பணியிட மாற்றத்தின் ஒரு பகுதியாக வினோத் கிருஷ்ணா திருவனந்தபுரம் பேரூர் கடைக்கு மாற்றப்பட்டபோதும் அப்பெண்ணைத் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள தனது குடியிருப்பிலும் அப்பெண்ணை தன்னுடன் தங்க வைத்திருந்தார். மேலும், அலுவல் ரீதியான வழக்கு விசாரணைக்காக ஐதராபாத் செல்ல நேரிட்டபோதும் அவர் அப்பெண்ணை உடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இளம்பெண் கர்ப்பமானதைத் தொடர்ந்து இவர்களது உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. பெண் கர்ப்பமான விவரம் தெரிந்ததும் அவரிடம் இருந்து விலகத் தொடங்கினார் வினோத் கிருஷ்ணா. அவர் தன்னைத் திட்டமிட்டு ஏமாற்ற முயல்வதைப் புரிந்துகொண்ட இளம்பெண், ​இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

புகாரின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்ட உயர் அதிகாரிகள், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் வினோத் கிருஷ்ணாவை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்தனர். இளம் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய விவகாரத்தில், ஆய்வாளர் வினோத் கிருஷ்ணா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்வது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். தற்போதைக்கு கிரிமினல் வழக்கு வேண்டாம் என இளம்பெண் கூறிவருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *