`இந்த தொழில் மேல இருக்குற பாசத்துலதான் விடாம செஞ்சுட்டு இருக்கேன்’- ஒரு பானைக் கலைஞனின் கதை!

Spread the love

மாறிவரும் சந்தையும் குறையும் வரவேற்பும்:

“முன்னாடி இந்த பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. இப்போ பிளாஸ்டிக், ஸ்டீல் பொருள்கள் வந்ததுக்கப்புறம் கொஞ்சம் வியாபாரம் குறைஞ்சிருக்கு. ஆனாலும் மண் சட்டி, மண் குடம் வாங்குறவங்க இன்னும் இருக்காங்க,” என்று அவர் கூறினார்.

அவரது வார்த்தைகளைக் கேட்டபோது, உழைப்புக்கும் வாழ்க்கைப் போராட்டத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் பல கைவினைக் கலைஞர்களின் நிலை நினைவுக்கு வந்தது.

அடுத்த தலைமுறைக்கு செல்லாத கலை:

“எங்க அப்பா எங்களுக்கு கத்துக்கொடுத்த மாதிரி நாங்க அடுத்த தலைமுறைக்கு கத்துக்கொடுக்கணும்னு நினைச்சோம். ஆனா இப்போ இந்த தொழிலுக்கு ஆட்கள் இல்லை, வருமானமும் குறைஞ்சிருக்கு. அதனால எங்க வீட்டுல இருக்குற பசங்களையும் இந்த தொழிலுக்கு வரச் சொல்லல. அவங்க நல்ல வாழ்க்கை வாழணும்னுதான் ஆசை.

ஆனா இந்தக் கலை எங்களோடவே முடிஞ்சிடுமோனு நினைச்சா கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு,” என அவர் கூறியபோது, அவரது குரலில் இருந்த ஏக்கமும் முகத்தில் தெரிந்த சோகமும் இந்தக் கலையின் எதிர்காலத்தைப் பற்றிய அவரது கவலையை வெளிப்படுத்தியது. அரை நூற்றாண்டாக மண்ணோடு வாழ்ந்த ஒரு கலைஞனின் மனவேதனை அந்த சில வார்த்தைகளிலேயே உணர முடிந்தது.

ஏழைக்கு இடமில்லையா

எங்கும் இந்த தொல்லையா

ஈசன் பாதை இல்லையா

பேச மனம் இல்லையா…

பாழ் மழை பெய்யல

பஞ்சமும் ஒளியை

பாடு படும் கையில

பானை செஞ்சி நாலணா

கஞ்சிக்கொரு மூணனா

கையிலேது காலணா…

என்ற பாடலை பாடி அவரின் வலிகளை கூறி முடிக்கிறார்.

ஒரு பானையை உருவாக்க எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது என்பதையும், அந்த தொழிலின் பின்னால் இருக்கும் வாழ்க்கையையும் அறிந்து கொள்ள முடிந்தது. மண்ணை வெறும் பானையாக மட்டுமல்லாமல், தனது வாழ்க்கையாக வடித்து வரும் கோவிந்தசாமி போன்ற கலைஞர்களால்தான் இந்த பாரம்பரிய தொழில்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன.

ஒரு பானையை வாங்கும் போது அதன் விலையை மட்டும் பார்க்காமல், அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த பானையில் மண் மட்டுமல்ல, ஒரு மனிதனின் அனுபவமும் வாழ்க்கையும் கலந்திருக்கிறது.

– தர்ஷினி.சி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *