இந்த மைண்ட்செட் இருக்கிறவங்க கிரெடிட் கார்டு வச்சுக்கிட்டா, கடனாளி ஆவது கன்ஃபார்ம்! | guidance for money management and credit card use advice

Spread the love

இப்போது ஆலோசனைக்கு வந்துபோன இளைஞரும் அந்த ரகம்தான்…” என்றவர், கிரெடிட் கார்டு வைத்திருப்பதன் அவசியம், தேவை குறித்தும், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், வருமான அளவை மனதில் வைத்து, கார்டு மூலமான கடனை எப்படிக் கட்டுப்பாட்டுடன் கையாள வேண்டும், எப்படி பில் தொகை கட்ட வேண்டும், எத்தனை கார்டு வைத்துக்கொள்ள வேண்டும், எப்படிப்பட்ட மனப்பான்மை உள்ளவர் கிரெடிட் கார்டை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த இளைஞருக்கு அறிவுரை சொன்னதாகச் சொன்னார் நிதி ஆலோசகர்.

அவர், அந்த இளைஞருக்குச் சொன்ன ஆலோசனை இதுதான்…

‘‘கிரெடிட் கார்டு அவசியம்தான்… ஆனால், நமக்குத் தேவையா, எதற்குத் தேவை, எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்ற கேள்விகள் கேட்டு அதற்கான சரியான பதிலை அறிய வேண்டும். இளைஞர்கள் முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். கிரெடிட் கார்டு என்பது பணம் இல்லாத சூழலில் உதவும் ஒரு கருவி. அதேநேரம், அதன் மூலம் பெறும் பணம் நம்முடைய பணம் கிடையாது. கிரெடிட் கார்டு என்பது ஒரு கடன் வசதி. அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நம்முடைய நிதி எதிர்காலம் இருக்கிறது.

அவசரமான நேரத்தில் பணம் கையில் இல்லாதபோது, ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யும்போது, சில குறிப்பிட்ட செலவுகளுக்கு வட்டியில்லாத கால அவகாசத்தைப் பயன்படுத்தும்போது கிரெடிட் கார்டு உதவியாக இருக்கலாம். ஆனால், கார்டு இருக்கிறது என்பதற்காகத் தேவையில்லாத பொருள்களை வாங்கினால் சிக்கல்தான். கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும்போது, அந்தப் பணம் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து உடனே போகாததால், செலவு செய்த உணர்வே பலருக்கு வருவதில்லை என்பதுதான் ஆபத்தான விஷயம். இதுதான் பிரச்னையின் ஆரம்பம்.

அடுத்ததாக, எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்துக்கொள்ளலாம் என்ற கேள்வி வருகிறது. இதற்கு எல்லோருக்கும் பொருந்துகிற ஒரே எண்ணிக்கையைச் சொல்ல முடியாது. அவரவர் வசதி, தேவையைப் பொறுத்த விஷயம். ஆனால், செலவுகளைக் கண்காணிக்க முடியாதவர்கள், ஏற்கெனவே கடன் வைத்திருப்பவர்கள், கார்டுகளின் கட்டணத் தேதிகளை மறந்துவிடுபவர்கள் கிரெடிட் கார்டையே தவிர்ப்பதுதான் நல்லது. கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு கார்டுகள் போதுமானதாக இருக்கும்.

கார்டில் செலவு செய்த தொகையை மாதம்தோறும் முழுமையாகச் செலுத்துவதுதான் முக்கியம். குறைந்தபட்சத் தொகையை மட்டும் கட்டிவிட்டால் போதும் என்று நினைப்பது மிக மிகத் தவறு. அது தாமதக் கட்டணத்தைத் தவிர்க்க உதவினாலும், மீதமுள்ள தொகைக்கு வட்டி தொடர்ந்து சேர்ந்து சுமை ஆகிவிடும். அதோடு, புதிய செலவுகளும் சேரும்போது கடன் பெரிதாகிவிடும்.

சம்பளம் வந்ததும் முதலில் அத்தியாவசியச் செலவுகள், வீட்டுக் கடன் உள்ளிட்ட தவணைகள், சேமிப்பு ஆகியவற்றுக்குப் பணத்தை ஒதுக்க வேண்டியது அவசியம். அதன் பிறகு கையில் இருக்கும் தொகைக்குள் செலவைத் திட்டமிடுவதே நல்லது. கிரெடிட் கார்டு செலவுகளை இதுதான் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும். நிறைய பேர் செய்யும் தவறு, அடுத்த மாதச் சம்பளத்தை முன்கூட்டியே கார்டு மூலம் செலவு செய்துவிடுவதுதான். இது மிக மிக மோசமான பணப் பழக்கம் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்வது முக்கியம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *