பெத்லகேம் குடும்ப யூனிட் – மலையாளம்
கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள இப்படத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடித்துள்ளனர். இந்த ஃபீல் குட் திரைப்படமானது ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
காலிஃபா – மலையாளம்
வைசாக் இயக்கியுள்ள இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், நீல் நிதின் முகேஷ் மற்றும் மாளவிகா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ஆக்ஷன் கிரைம் த்ரில்லர் திரைப்படமானது ஆகஸ்ட் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இருமுடி – தெலுங்கு
சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் சாய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ஆக்ஷன் டிராமா திரைப்படமானது ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இன்சிடியஸ் – அவுட் ஆஃப் தி ஃபர்தர் – ஆங்கிலம்
ஜேக்கப் சேஸ் இயக்கியுள்ள இப்படத்தில் அமெலியா ஈவ், பிராண்டன் பெரியா, மைசி ரிச்சர்ட்சன்-செல்லர்ஸ் மற்றும் லின் ஷே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திகில் திரைப்படமானது ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மியூட்டினி (Mutiny) – ஆங்கிலம்
ஜீன்-பிரான்சுவா ரிஷெட் இயக்கியுள்ள இப்படத்தில் ஜேசன் ஸ்டேதம், அன்னாபெல் வாலிஸ் மற்றும் அட்ரியன் லெஸ்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ஆக்ஷன் திரைப்படமானது ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.